செட் போடாமல் உண்மையான தளத்தில் நடக்கும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு!

 

நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் வழிகாட்டுதலின் கீழ் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள், அனைத்து தடை கற்களையும் அகற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் படத்தின் முன் தயாரிப்பை தொடங்குவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். ‘NC23’ படக்குழுவினர் ஆந்திராவின் கடலோரப் பகுதியை ஆய்வு செய்து, ஸ்ரீகாகுளத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் பன்னி வாஸ் பேசுகையில், ” இந்த படத்தின் கதையை ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார். மக்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து இந்த படத்தின் முன் தயாரிப்பை கவனத்துடன் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி பேசுகையில், ”இந்த கிராமத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு நிமிடத்தின் விவரங்களையும் உற்று கவனித்த பிறகு தான், எங்களின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்குகிறது” என்றார்.

நாயகன் நாக சைதன்யா பேசுகையில், ” இந்த கிராமத்திலுள்ள கதாபாத்திரங்களை சந்திக்கவும், அவர்களின் உடல் மொழியை படிக்கவும், கிராமத்தின் நிலவியல் அமைப்பை அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ளவும் நாங்கள் இங்கு வருகை தந்திருக்கிறோம்” என்றார்.

Makers Of Naga Chaitanya's NC23 Commence Shoot After Exploring Coastal  Andhra Pradesh, Present The First Cut Documentation | Entertainment News,  Times Now

இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘NC 23 ‘பட குழுவினர் மீனவர்களின் தொழில் சார்ந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள அவர்களுடன் கடலுக்குள் சென்றனர். இந்த முழு பயணமும் ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான பயணம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். தெலுங்கு திரையுலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் படப்பிடிப்பை தொடங்கும் ஒரு நாயகன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மக்களுடன் உரையாடினார். முன் தயாரிப்பு வேலைகளிலும் படத்தின் நாயகனான நாக சைதன்யா தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.