சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!

0
29

மணிரத்னம் டைரக்ஷனில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இச்சூழலில் இந்தப் படத்தின் வெற்றியால் நடிகர் ஜெயம் ரவி தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திப்புட்டார்

இந்தப் படத்தின் வெற்றியால் படம் வெளியாவதற்கு முன்பே ஜெயம் ரவியின் படம் ப்ரீ பிசினஸாக 70 கோடி வரை செல்கிறது எனவும் இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய ஜெயம் ரவி இனிவரும் படங்களில் இதை அதிகரிசுப்புட்டார்.

இவரது நடிப்பில் அடுத்து ’இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.