15
Jun
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2". இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் "நந்தினி" எனும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகின்றன. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…