கேட்டீயளா சேதி.. கோலிவுட்டில் புது பிரஸ் யூனியன் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு!

சென்னையின் செல்வ செழிப்புக்கு வழிக்காட்டும் இடங்களில் ஒன்றான கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் சினிமாவை நம்பி பொழப்பு ஓட்டுவோர்களில் நான் ‘சினிமா ஜர்னலிஸ்ட்’ என்ற அடையாளத்துடன் உலா வருவோர் அதிகரித்து விட்டார்கள்..!

முன்னெல்லாம் சினிமாவில் தலைக்காட்ட ஆசைப்படுவோர் பல்வேறு ஹோட்டல்களில் ஒர்க் செய்தபடி வாய்ப்பு தேடியோர் அதிகம்.. ஆனால் இப்போதோ ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் .. ஃப்ரீயாக கிடைக்கும் யூ ட்யூப்-பில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ‘நானும் ஜர்னலிஸ்ட்’ என்ற போர்வையுடன் உலா வந்து விடுகிறார்கள்..

இதை எல்லாம் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டிய பீ ஆர் ஓ சங்கம் எனப்படும் தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை ‘ மக்கள் தொடர்பாளர்’ என்றே அழைக்கத் தொடங்கி அதையே நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள்..!
ஆனால் அந்த பீஆர்ஓ சங்க மெம்பர்கள் ஒவ்வொருவரும் தங்களை மீடியா என்றே நம்ப தொடங்கி கோலிவுட்டையும் நம்ப வலியுறுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது….அந்த பீ ஆர் ஓ யூனியனில் உள்ள 80க்கும் அதிகமான உறுப்பினர்களின் கல்வி தகுதி., ஆன் லைன்ஹேண்டில் , பின்னணி தொடங்கி அன்றாட வருவாய் குறித்து கண்காணித்து அம்பலப்படுத்த உருவாகி உள்ளதே இந்த தமிழ் சினிமா பிரஸ் கிளப்.. !

சாம்பிளுக்குச் சொல்வதானால் பீ ஆர் ஓ லிஸ்டில் தன் குடும்ப உறுப்பினர் கள் நாலு பேர்களைச் சேர்த்து லாபி பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பீ ஆர் ஓ தனக்கு பிடித்த மிகச் சிலரை மட்டும் அழைத்து ஒரு பிரஸ் மீட் – அதுவும் பலகோடி இன்வெஸ்ட்மெண்டில் தயாரான படத்துக்கு அரெஞ்ச் செய்கிறார்..கூடவே அதே படத்துக்கு தன் ம்னசுக்கு உகந்தவர்களை ஜர்னலிஸ்டுகள் என்ற போர்வையில் தலா இரண்டரை லட்சம் செலவில் ஹைதராபாத் அழைத்து போக ஏற்பாடு செய்தார்..மேற்படி போர்வையில் கோலிவுட்டில் தாதா ரேஞ்சில் உலா வரும் சிலர் கூட கண்டும் காணாமல் இருக்கும் போது ஏற்படும் இழப்பை சுட்டிக் காட்ட யாராவது வேண்டாமா?

அதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் இப்போது சட்டப்படி பதிவுச் செய்யப்பட்ட இந்த பிரஸ் கிளப் சார்பாக வாரா வாரம் 16 பக்கம் கொண்ட ஒரு அச்சிதழ் வரப் போகிறது.. அதில் அந்தந்த வார கோலிவுட் அப்டேட் சேதிகளுடன் சிறப்புச் சேதியாக வாரா வாரம் இரண்டு முதல் நான்கு பக்கம் சிலபல அதிரடி சேதிகளுடன் வர இருக்கிறது..

இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால்..

நாளை நம் https://cinemapressclub.com/ ல் விரிவாக காணத் தயாராகுங்கள்