07
Feb
சென்னையின் செல்வ செழிப்புக்கு வழிக்காட்டும் இடங்களில் ஒன்றான கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் சினிமாவை நம்பி பொழப்பு ஓட்டுவோர்களில் நான் ‘சினிமா ஜர்னலிஸ்ட்’ என்ற அடையாளத்துடன் உலா வருவோர் அதிகரித்து விட்டார்கள்..! முன்னெல்லாம் சினிமாவில் தலைக்காட்ட ஆசைப்படுவோர் பல்வேறு ஹோட்டல்களில் ஒர்க் செய்தபடி வாய்ப்பு தேடியோர் அதிகம்.. ஆனால் இப்போதோ ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் .. ஃப்ரீயாக கிடைக்கும் யூ ட்யூப்-பில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ‘நானும் ஜர்னலிஸ்ட்’ என்ற போர்வையுடன் உலா வந்து விடுகிறார்கள்.. இதை எல்லாம் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டிய பீ ஆர் ஓ சங்கம் எனப்படும் தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை ‘ மக்கள் தொடர்பாளர்’ என்றே அழைக்கத் தொடங்கி அதையே நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள்..! ஆனால் அந்த பீஆர்ஓ சங்க மெம்பர்கள் ஒவ்வொருவரும் தங்களை மீடியா என்றே நம்ப தொடங்கி கோலிவுட்டையும் நம்ப வலியுறுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே…