11
Nov
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பான (The Vaccine War) 'தி வாக்சின் வார்' திரைப்படம் பல்லவி ஜோஷியின் I Am Buddha புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று Abhishek Agarwal Arts நிறுவனம் மூலமாக 11 மொழிகளில் வெளியாகிறது திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கடைசி திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார், படத்தின் தலைப்பு குறித்த யூகத்தை மட்டும் கொடுத்துவிட்டு நெட்டிசன்களை அதற்கு கருத்து கூற வைத்தார். இந்த புதுமை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போது ரசிகர்களின் அனைத்து காத்திருப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் தனது அடுத்த படத்தின் தலைப்பாக 'தி…