இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – பட விமர்சனம்!

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு 60 வயது பெரிசு சொன்னது இது:

“எங்க காலத்துலே வீட்டுக்கு வர்ற பத்திரிகைகளில் லிரில் சோப்பு விளம்பரம் வரும்..அதுலே நடிகைங்க டூ பீஸில் உள்ள படத்தை பார்த்தாலே கிளுகிளுப்பு அள்ளும்.. ஆனா இப்ப நெலமை வேற.. எதுவும் என்னதையும் கிளர்ச்சியூட்ட மாட்டேங்குது 

இதே படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு யங் பாய் சொன்னது :

இப்பல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் ட்ரிபிள் மீனிங்-கில் சொல்றதுதான் ட்ரெண்டிங். இதுலே ஒரு மீனிங் மட்டும் படு செக்சியா இருக்கணும்.. அப்படி பேசினாத்தான் கேர்ள்-ஸூங்கிட்டே காபி ஷாப் போய் டைம் பாஸ் பண்ணலாம்

இதனிடையே இந்த படத்தை பார்த்து விட்டு வந்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் சொன்னது ;

கில்மா, கிளாமர், செக்ஸ் எல்லாம் கலந்த படம் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஏன்னா இப்ப ஆளாளுக்கு கையில் வைச்சிருக்கற செல்போனில் எல்லாத்தையும் முழுசா பார்த்துட றாங்க.. கூடவே பல பலான விஷயங்களையும் கேட்டுடறாங்க.. இதையெல்லாம் மீறி ரசிக்கற மாதிரி சினிமா அதுவும் முகம் சுளிக்க வைக்காத தமிழ் சினிமா எடுத்துட்டாங்களே.. 

இப்படி ஆளாளுக்கு கிளுகிளுப்பான விஷயங்களை நினைவூட்டி குதூகலப்படுத்தும் படுத்தும் படம்தான் ‘இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு’ .

ஆனாலும் இந்த அடெல்ட் காமெடி தமிழுக்கு ஒத்து வராது. தமிழ்க் கலாச்சாரம், நேர்மை, நல்ல ஹீரோ என்பது போன்ற பதங்கள் இந்த வகை ஜானரை நாறடித்து விடும். ஆனால் இந்த படத்தில் இறங்கி அடித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் குண்டூர் டாக்கீஸ் எனும் பெயரில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படத்தை அதன் சாரம் கெடாமல் அட்டகாசமாய் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். அதுவும் “குண்டி கழுவி விடுப்பா, ஸ்கூலுக்கு டயமாச்சு” என பையன் அழும் படத்தின் முதல் ஷாட்டே படம் பற்றி அழுத்தமாக சொல்லி விடுகிறது.

விமலும், சிங்கம்புலி உள்ளூர் மெடிக்கலில் பாடாவதி ஓனரிடம் பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள். அதனால் கொஞ்சம் துணிச்சலாக இரவில் பூட்டியிருக்கும் வீடுகளில் சின்ன சின்ன பொருட்களை திருடி விற்று கிடைக்கும் காசில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுபவர்கள். அப்படி அவர்கள் செய்யும் திருட்டு அவர்கள் வாழ்க்கையை எப்படி பந்தாடுகிறது எனும் காமெடி கலாட்டா தான் படம்.

ஆரமபத்திலேயே அடல்ட் என வந்து விட்ட பிறகு அட வெட்கம்-னா என்னா?என சகலக் காட்சி களிலும் இறங்கிச் சுருட்டி அடித்திருக்கிறார்கள். அதிலும் ஆரம்பக் காலத்தில் ‘இங்கிட்டு மீனாட்சி’ என்ற அப்பாவி மாதிரி நடித்தே தனிக் கவனம் பெற்ற நடிகர் விமல் வீட்டு ஓனர் மனைவியுடன் மேட்டர், வீட்டுக்கு வரும் பெண்ணுடன் சல்லாபம் என கெட்ட பையன் வேஷத்தை அனுபவித்து நடித்திருக்கிறார். குறிப்பாக ஹிரோக்கள் ஏற்க தயங்கும் இந்த ரோலை துணிந்து தூள் கிளப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஆஷ்னா ஜாவெரி துணிந்து துணியை துறந்திருக்கிறார். நடிப்பு தான் தத்தளிக்கிறது. இருந்தும் திரையை விட்டு கண் அகலாமல் பார்த்துக் கொள்கிறார். நெடுநாட்களுக்குப்பின் சிங்கப்புலி இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார்.

படத்தின் மிகப்பெரும் பலம் நடிகர்கள்தான்.. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், பூர்ணா அனைவரும் அட்டகாசமாக தங்கள் பங்களிப்பை தந்திருக்கிறார்கள். ஆனந்த்ராஜ் அடிக்கும் பிட்டுபட தியேட்டர் காமெடிகள் வெடிச் சிரிப்பு.

இடைவேளைக்குப் பிறகு நடக்கும் சேஸிங் காட்சிகளில் தியேட்டர் முழுதும் சிரிப்பலை. சன்னி லியோன் தங்கை ஐரோப்பாவின் பலான நாயகி பட்டியலில் முதலிடம் பிடித்தவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.லியோனி பெயரை கெடுக்காத பாத்திரம். ஆனாலும் அவர் வரும் காட்சிகளில் தியேட்டர் கூட கொஞ்சம் வெட்கப்படுகிறது.

இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையானதை வழங்கி இருக்கிறது. ஓவர் மேக்கப் ஒரு மாதிரியாக உறுத்துகிறது. செட் ஒர்க்குகள் சினிமா எனபதை உறுதிப்படுத்துகிறது. இதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனாலும் தமிழில் முதன் முதலாக சொல்லிக்கொள்ள ஒரு நல்ல அடல்ட் காமெடி இவனுக்கு எஙகயோ மச்சம் இருக்கு.

ஆனா குடும்பத்தோடு, குழந்தைகளோடு போய் விடாதீர்கள். தியேட்டர் முழுதும் சில்லறைகள் சிதறிக்கொண்டே இருக்கும்.

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு..இந்த தலைமுறையினர் ரசிக்கும் அடல்ட் காமெடி என்பது மட்டும் நிசம்தான்.