யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘சன்னிதானம் பி.ஓ’ என்று பெயரிடப்பட்டுள்ளது !

யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘சன்னிதானம் பி.ஓ’ என்று பெயரிடப்பட்டுள்ளது !

சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில் குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படம் 'சன்னிதானம் பி.ஓ' சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது,மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு மற்றும் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி முதன்மை வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதாசாரதி, "சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து 'சன்னிதானம் பி.ஓ' சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக…
Read More
நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் பூஜை நடைபெற்றது!

நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் பூஜை நடைபெற்றது!

  தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத்திறனாலும் , வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.   டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்  போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜி.மதன்…
Read More
சம்பளமே வாங்காமல் குரல் கொடுத்த விஜய் சேதுபதி ! மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

சம்பளமே வாங்காமல் குரல் கொடுத்த விஜய் சேதுபதி ! மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மற்றும் அதிதி ஷங்கர் கதானாயகியாக நடித்திருந்தார், இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்தப் படத்திற்கு மண்டேலா பட இசையமைப்பாளர் பரத் சங்கர் தான் இசையமைத்துள்ளார், மேலும் இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனருக்கு இது இரண்டாவது படமாக இருந்தாலும், படத்தை சிறப்பாக எடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இதே படத்துக்காக முக்கிய ரோலில் தனது குரல் மூலம் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார் விஜய் சேதுபதி. படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் குரலும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில், இதற்காக விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. தனக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என டப்பிங் பேசுவதற்கு முன்பே புரொடக்‌ஷன் டீமிடம் சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி.இந்த…
Read More
நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

  ``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…
Read More
எப்படி இருக்கிறது ஷூ – திருப்திபடுத்தியதா?

எப்படி இருக்கிறது ஷூ – திருப்திபடுத்தியதா?

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரீப்பீட் ஷீ திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. குழந்தைகளை சுற்றியே இக்கதை நகரும் படி வடிவமைக்கப்படு இருக்கிறது. ஷூ போன்ற கால இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்தும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. இன்னொரு கதையாக தாயில்லா குழந்தை குடிகார அப்பாவிடம் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறது. இந்த மூன்று கதையும் ஒரு புள்ளியில் இணையும் இடம் தான் ஷூ. தொழில்நுட்ப வல்லுவனர்கள் வலுவாக இந்த படத்திற்கு அமைந்துள்ளனர். இசை, படதொகுப்பு என பல விஷயங்களில் இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். காமெடியும் அங்கங்கு வொர்க் ஆகிறது. ஆனால்…
Read More
யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”!

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”!

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில்  தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு,  ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே. இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.…
Read More
750 திரையரங்குகளில் “வீரமே வாகை சூடும்” படம் !

750 திரையரங்குகளில் “வீரமே வாகை சூடும்” படம் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணனன் எழுதி இயக்குகிறார்.…
Read More
கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது படத்தின் இறுதி…
Read More
ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் !

ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் !

ஷூட்டிங் ஸ்பாட்டில் மோதிக்கொண்ட யோகிபாபு உதவியாளர்கள் ! போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மலையோரம் வீசும் காற்று என்றபடத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது தமிழ் சினிமா காமெடி நடிகர்  யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  கடந்த ஒருவாரத்திற்கு மேல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது யோகி பாபுவின்உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த  சதாம் உசேன்(35), மற்றும் யோகி பாபுவின் கார்டிரைவர் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (31) ஆகிய இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்கள் இதனால்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர்  சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன்மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து…
Read More
டிக்கிலோனா –  சந்தானத்தின் ஆவரேஜ்  காமெடி!

டிக்கிலோனா – சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!

இயக்கம் - கார்த்திக் யோகி நடிப்பு - சந்தானம், அனாகா, ஷ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு கதை கரு: ஹாக்கி கனவு கொண்ட மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன்,…
Read More