30
Jul
இயக்குநர் - கிருத்திகா உதயநிதி நடிப்பு - காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், ஜீ5 ஒரிஜினலாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தொடர். வாழ்வை கற்றுத்தரும் அழகான 7 எபிஸோடுகள் கொண்ட பயணம் தன் தந்தை இறப்பிற்கு பிறகு மனமுடையும் இளைஞன், பிரச்சனைகளில் சிக்கி வாழ்வை வெறுத்து சிகிச்சைஎடுத்து கொண்டிருக்கும் சிலரை கூட்டிக்கொண்டு ஒரு பயணம் கிளம்புகிறான். அந்த பயணத்தில் அவர்கள்வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் அவர்கள் குணங்களிலும் மனங்களிலும் ஏற்படும் மாற்றமே இந்த பேப்பர்ராக்கெட். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பெரிய மாற்றம் பெரும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு கதைக்குள் அடக்கிஅதை ரசிக்கும் படி சொல்லி ஜெயித்திருக்கிறார். கோரோனா கால கட்டம் நம் கண் முன் பலரது வாழ்வை அடித்து சென்றுவிட்டது. பலர் மறைந்து விட்டனர் நாம்ஏன் வாழ்கிறோம் எனும் கேள்வியும் மன அழுத்தமும் பலரிடமும் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் இந்ததிரைக்கதையில் இருக்கிறது. ஒவ்வொரு எபிஸோடும்…