சத்யா நல்லையா இசையில், ராகதீபன் மற்றும் ஓவியா உமாபதி பாடல் வரிகளில், சத்யா மற்றும் ரட்சிதா சுரேஷ் குரலில் உருவாகியுள்ள “கருப்பழகி“ பாடல் வீடியோ வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது.
பாடலில் சத்யா மற்றும் தேஜா வெங்கடேஷ் நடித்துள்ளது. இந்த பாடல் வீடியோவை ஆதித்யா தங்கிராலா இயக்கியுள்ளார். ஓளிப்பதிவு, கலரிங் மற்றும் படத்தொகுப்பு பணிகளை யுவன் செல்வா கவனித்துள்ளார். படத்தின் பப்ளிசிட்டி டிசைன்களை NXTGEN ஸ்டூடியோ கவனித்துள்ளனர்.
இவ்விழாவினில்
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது….
ஆதித்யா என் அபார்ட்மெண்டில் இருக்கிறார். முன்பு அவரது குறும்படத்திற்கு வந்தேன் இப்போது இசை ஆல்பம் அடுத்து அவர் விரைவில் படம் இயக்குவார் என நம்புகிறேன். சமீப காலங்களில் சுயாதீன ஆல்பங்கள் வருகிறது அதற்கான வரவேற்பு உள்ளது. நல்ல பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேறபை தர வேண்டும் இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் மைம் கோபி பேசியதாவது…
இங்குள்ள ப்ரித்வி தம்பி உடன் பல காலமாக தொடர்பில் இருக்கிறேன். தம்பி இப்போது இயக்குநர் ஆகிவிட்டார். நிறைய தெளிவானவர். அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. சத்யா மிகமிக நல்ல மனிதன் அவனுக்கு கோபமே வராது அவனுக்குள் நிறைய திறமை இருக்கிறது. அவன் முயற்சிகள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும். அவனின் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெறட்டும். சத்யா பார்க்க மிக அழகாக இருக்கிறார். தோற்றம் பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது. கருப்பழகி ஒரு நல்ல முயற்சி விஷுவல்கள் பார்க்க மிக அழகாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் யுவன் செல்வா பேசியதாவது…
இது என் டீமுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது புராஜக்ட். நாங்கள் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் அப்போதிலிருந்தே ஆதித்யா மிக தெளிவாக ப்ளான் போடுவார். சத்யா மிக நேர்மையானவர். இம்தியாஸ் அவர் மிக கச்சிதமாக பட்ஜெட்டில் முடித்து கொடுத்தார். என் டீம் அனைவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இசை ஆக்கங்களுக்கு பெரிய விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இண்டிபெண்டண்ட் இசையை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் ப்ரித்வி ஆதித்யா பேசியதாவது…
கோபி அண்ணா மிக மிக நல்ல மனிதர் என்னை பாரட்டியதற்கு நன்றி. எழுத்து தான் படத்திற்கு முக்கியம் அது இருந்தால் போதும் என நீருபித்து காட்டிய பாலாஜி தரணிதரன் சாருக்கு நன்றி. இந்த பாடல் பார்த்த போது கடல் கடந்து சிங்கப்பூரில் இருந்தாலும் நம்மை இணைப்பது தமிழ் என தோன்றியது. பாடல் வரிகள் மிக நன்றாக இருந்தது. பாடியவர்கள் அற்புதமாக பாடியிருந்தார்கள். சத்யா இங்குள்ளவர்களை நம்பி இங்கு புது முயற்சிகளுக்கு நன்றி. ஆதித்யா என்னுடைய கோ டைரக்டர், ஆதித்யாவிடம் ஒரு வேலையை கொடுத்துவிட்டால் நீங்கள் அவரை முழுமையாக நம்பலாம். வேலையை கச்சிதமாக முடிப்பார். அவர் இந்த பாடலை செய்தது ஆச்சர்யமில்லை அவர் இன்னும் திறமை மிகுந்தவர் வாழ்த்துகள். இண்டிபெண்டண்ட் ஆல்பங்களுக்கு செலவு செய்தால் தான் சினிமாவை விட பிரமாண்டமாக செய்தால் தான் சென்று சேரும் அதை இந்த பாடலில் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் நன்றி.
பாடகர் திப்பு பேசியதாவது…
சத்யா மிக ஆர்வமிக்க இசையமைப்பாளர். எதை செய்தாலும் கச்சிதமாக செய்ய வேண்டும் என நினைப்பவர். மொத்த குழுவினரும் மிக நன்றாக உழைத்துள்ளார்கள் எனக்கு வருத்தம் என்றால் என்னை பாட வைத்திருக்கலாம் என தோன்றியது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
பாடகி ஹரிணி பேசியதாவது…
சத்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாடல் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தேஜா வெங்கடேஷ் கூறியதாவது…
சத்யா தான் என்னை முதலில் அழைத்தார் இந்த பாடல் எனக்கு பிடித்தது நடிக்க ஒப்புக்கொண்டேன். படக்குழு யாரையும் தெரியாது ஆனால் எல்லோரும் மிக நட்பாக பழகினார்கள் மிக ஆதரவாக இருந்தார்கள். சத்யா சிங்கப்பூரிலிருந்து வந்து மிக ஆர்வத்துடன் உழைத்துள்ளார். ஆதித்யாவை அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி. எங்கள் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஆதித்யா
சிங்கப்பூர் இந்தியாவை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாடலை செய்தாலும் இந்தப்பாடலை பத்திரிக்கையாளர் நினைத்தால் பெரிய அளவில் கொண்டு செல்லலாம் என நம்புகிறேன். என் குழுவினர் அனைவரும் மிக கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள் அனைவருகும் நன்றி. பாடலை கேளுங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.
சத்யா நல்லையா கூறியதாவது….
இந்தப்பாடல் 1 வருடம் முன் செய்தது. ஆனால் விஷுவல் வயல் வெளியில் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கோவிட் முடிந்தவுடவே யுவனுக்கு போன் போட்டு இந்தியா வர்றேன் பாடல் எடுக்க வேண்டும் என சொன்னேன். யுவனை முழுமையாக நம்பலாம். பிரவீன் அண்ணா மிக உதவியாக இருந்தார் இந்த முழு குழுவினரும் எனக்காக மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். நடிகைகள் எல்லாம் ஆட்டிடியூட் காட்டுவார்கள் என கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் தேஜா மிக நல்ல தோழியாக இருந்தார். இந்த பாடலை அனைவரும் ஷேர் செய்யுங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.