சத்யா மற்றும் தேஜா வெங்கடேஷ் நடித்துள்ள ‘கருப்பழகி’ பாடல் வீடியோ வெளியீடு!

சத்யா மற்றும் தேஜா வெங்கடேஷ் நடித்துள்ள ‘கருப்பழகி’ பாடல் வீடியோ வெளியீடு!

சத்யா நல்லையா இசையில், ராகதீபன் மற்றும் ஓவியா உமாபதி பாடல் வரிகளில், சத்யா மற்றும் ரட்சிதா சுரேஷ் குரலில் உருவாகியுள்ள “கருப்பழகி“ பாடல் வீடியோ வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. பாடலில் சத்யா மற்றும் தேஜா வெங்கடேஷ் நடித்துள்ளது. இந்த பாடல் வீடியோவை ஆதித்யா தங்கிராலா இயக்கியுள்ளார். ஓளிப்பதிவு, கலரிங் மற்றும் படத்தொகுப்பு பணிகளை யுவன் செல்வா கவனித்துள்ளார். படத்தின் பப்ளிசிட்டி டிசைன்களை NXTGEN ஸ்டூடியோ கவனித்துள்ளனர். இவ்விழாவினில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது…. ஆதித்யா என் அபார்ட்மெண்டில் இருக்கிறார். முன்பு அவரது குறும்படத்திற்கு வந்தேன் இப்போது இசை ஆல்பம் அடுத்து அவர் விரைவில் படம் இயக்குவார் என நம்புகிறேன். சமீப காலங்களில் சுயாதீன ஆல்பங்கள் வருகிறது அதற்கான வரவேற்பு உள்ளது. நல்ல பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேறபை தர வேண்டும் இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள். நடிகர் மைம் கோபி பேசியதாவது… இங்குள்ள ப்ரித்வி தம்பி…
Read More