ஹிந்துஸ்தான் குழுமங்களின் நிறுவனர் கே சி ஜி வர்கீஸ் பெயரில் 2008 முதல் அவர்களது கல்லூரி வளாகத்தில் நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழாவினை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டில் மிகவும் பிரமாண்டமாக சென்னை சிட்டி செண்டர் வணிக வளாகத்தில் உள்ள ஐ நாக்ஸ் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். Fearless & Humanity என்கிற கருத்தை மையமாக வைத்து 14 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 திரைப்படங்கள் இன்றும் 24 & 25 ஜூலை 2019 நாளையும் திரையிடப்படவுள்ளன. ரசிகர்கள் இலவசமாக இந்தத் திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.
இந்த விழாவினை இயக்குநர் இமயம் பாரதிராஜா , அமலா பால், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், இயக்கு நர் ரத்னகுமார் , ICAF தங்கராஜ் மற்றும் தைவான், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேந்த தூதரக அதிகாரிகள் முறையே சார்லஸ் மற்றும் ஆண்ட்ரூ கொல்லிஸ்டர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமலா பால், “ இந்த உலகில் நாம் பிறக்கும் போது ஆடைகள் இல்லாமல் பிறப்பதுபோலத்தான், மொழி, மதம், சாதி போன்றவை இல்லாமலும் பிறக்கின்றோம். அவை, பின்னாளில் நம் மீது திணிக்கப்படுகின்றன. உலகம் முழுவதிலும் சாதி, மொழி மற்றும் மதங்களின் பெயரால் பயங்கவாதச் செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தத் திரைப்பட விழா விற்கான இவர்களது கருத்தான பயமில்லா மனிதநேயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது… நாம் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்தோடு வாழ்வோம்..” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, “ எனக்கு சினிமா தவிர ஒன்றும் தெரியாது. சாகும் வரை அரசியல் உட்பட எதற்கும் போகமாட்டேன், சினிமா மட்டும் தான் என்னுடன் வரும். அந்த சினிமா தான் என்னை பலமேடைகளில் ஏற்றி சான்றோர்களுடன் அமர வைத்திருக்கிறது. உன்னை உலகப்பணக்காரர்களுள் ஒருவரான அம்பானியாகப் படைக்கவா என்று கடவுள் கேட்டால், வேண்டாம் என்னை திரும்பவும் சினிமா இயக்குநராகவே படையுங்கள் என்று தான் கேட்பேன். எங்களது இள வயதுகளில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள வேண்டுமானால், நாங்கள் டெல்லிக்குத்தான் செல்லவேண்டும். அந்த வகையில் இன்றைய தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்களாக இருக்கவேண்டும். கிட்டத்தட்ட வீட்டுக்கே உலகத்தரமான சினிமாக்கள் வந்துவிடுகின்றன…” என்றார்.
ஹிந்துஸ்தான் குழும தலைவர் எலிசபத் வர்கீஸ், இயக்குநர் சூசன் மார்த்தாண்டன், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திருமுகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்புவிருந்தினர்களைக் கெளரவித்தனர்.
டாக்டர் கே சி ஜி வர்கீஸ் சர்வதேசத்திரைப்பட விழா ஏற்பாடுகளை எம் பி பிர[பு மற்றும் வினோ ஹாசன் ஆகியோர் செய்திருந்தனர்