தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது!

தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது!

  தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது.   "தளபதி 69" படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய 'தளபதி' விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார்.…
Read More
தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது https://twitter.com/RKFI/status/1699656596794814508
Read More
இயக்குனர் செல்வராகவன் மற்றும் எச் வினோத் கலந்து கொண்ட ‘லெவன்’ படத்தின் பூஜை!

இயக்குனர் செல்வராகவன் மற்றும் எச் வினோத் கலந்து கொண்ட ‘லெவன்’ படத்தின் பூஜை!

  'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு 'லெவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில்…
Read More
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு…
Read More
சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

நடிகர் சிவகுமார் வழங்கும் ' திருக்குறள் 100' திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற பார்வையில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி , அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் மணக்குடவர் , பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார். 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழியில் இறங்கி…
Read More
சாதனை படைக்கும் வலிமை !

சாதனை படைக்கும் வலிமை !

நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது. படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண கிடைக்கின்றன. “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ்  ஓடிடி இயங்கு தளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது. நடிகர் அஜித் குமார் அவர்களை கௌரவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்…
Read More
வலிமை –  முழுமை இல்லாத சினிமா.

வலிமை – முழுமை இல்லாத சினிமா.

  இயக்கம் - H வினோத் நடிகர்கள் - அஜித்குமார் ஹுமா குரேஷி மூன்று வருட காத்திருப்பிற்கு பிறகு வந்திருக்கும் அஜித்தின் சினிமா ஆனால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதாஎன்றால் இல்லை. பைக்-ல் செயின் பறிப்பு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து குற்றங்களை தடுக்கமுயற்சிக்கும் ஹீரோ, அந்த கும்பல் அசாத்தியம் நிறைந்த ஒரு கூடாரம் என தெரிந்த உடன் அவர்களை எப்படிசமாளிக்கிறார் என்பதே கதை. விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரைக்கதைக்கும், வெற்று செண்டிமெண்ட் காட்சிகளால் நிரப்பி வைக்கபடும்திரைக்தைக்கும் இடையில் சிக்கி விழி பிதுங்கி இருக்கிறது வலிமை திரைப்படம். முழுமையாக ஆக்‌ஷன் காட்சிகளால் நகர வேண்டிய அமைப்பை கொண்ட திரைக்கதை ஆக்‌ஷன் காட்சிகளைதனியாகவும், மற்ற காட்சிகளை தனியாகவும் தெரியும் படி ஒட்டாமல் தொங்குகிறது. தனது சாமார்த்தியமான தந்திரத்தால், வேலையில்லாத இளைஞர்களை தன் வசம் இழுத்து குற்றங்களை செய்யவைத்து அதன் மூலம் ஆதாயம் தேடும் வில்லன் கதாபாத்திரம். வில்லன் கதாப்பாத்திரத்தின் வலு, கதையளவில்மட்டுமே உள்ளது, நடிப்பில் பெரிதாக…
Read More