வலிமை –  முழுமை இல்லாத சினிமா.

வலிமை – முழுமை இல்லாத சினிமா.

  இயக்கம் - H வினோத் நடிகர்கள் - அஜித்குமார் ஹுமா குரேஷி மூன்று வருட காத்திருப்பிற்கு பிறகு வந்திருக்கும் அஜித்தின் சினிமா ஆனால் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதாஎன்றால் இல்லை. பைக்-ல் செயின் பறிப்பு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து குற்றங்களை தடுக்கமுயற்சிக்கும் ஹீரோ, அந்த கும்பல் அசாத்தியம் நிறைந்த ஒரு கூடாரம் என தெரிந்த உடன் அவர்களை எப்படிசமாளிக்கிறார் என்பதே கதை. விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரைக்கதைக்கும், வெற்று செண்டிமெண்ட் காட்சிகளால் நிரப்பி வைக்கபடும்திரைக்தைக்கும் இடையில் சிக்கி விழி பிதுங்கி இருக்கிறது வலிமை திரைப்படம். முழுமையாக ஆக்‌ஷன் காட்சிகளால் நகர வேண்டிய அமைப்பை கொண்ட திரைக்கதை ஆக்‌ஷன் காட்சிகளைதனியாகவும், மற்ற காட்சிகளை தனியாகவும் தெரியும் படி ஒட்டாமல் தொங்குகிறது. தனது சாமார்த்தியமான தந்திரத்தால், வேலையில்லாத இளைஞர்களை தன் வசம் இழுத்து குற்றங்களை செய்யவைத்து அதன் மூலம் ஆதாயம் தேடும் வில்லன் கதாபாத்திரம். வில்லன் கதாப்பாத்திரத்தின் வலு, கதையளவில்மட்டுமே உள்ளது, நடிப்பில் பெரிதாக…
Read More