21
Jan
இயக்கம் - தர்புகா சிவா நடிகர்கள் - ஹரீஷ், அமிர்தா, ரகுநாத் ஒரு திரைப்படத்துல என்ன இருக்கனும்? கதையா? காட்சிகளா? நடிகர்களின் அசாத்திய நடிப்பா? இல்லை ஒரு புது உலகத்தை காட்டுற ஆச்சர்யமா? இல்லை நம்ம வாழ்ற உலகத்துக்குள்ள இருக்க அழகியலான அனுபவமா? இப்படி அடுக்கிகிட்டு போற கேள்விக்கான பதில் என்னன்னா? பதிலே இல்ல, அப்படிங்கிறது தான் பதில். காரணமில்லாம நடக்குற அற்புதங்களும், ஆபத்துகளும் தான் வாழ்கை. அந்த அற்புதத்தையையும், ஆபத்தையையும், கூடவே வாழ்கையோட ஆனந்தத்தையும் தர முயற்சி பண்ண படம் தான் “முதல் நீ, முடிவும் நீ”. பள்ளி பருவத்தோட சந்தோசத்துலயும், அங்க கிடைக்கிற ஆனந்தத்துலயும் வாழ்ந்துட்டு இருக்க பசங்களோட வாழ்கை அவங்க எடுக்கிற முடிவுகளால எப்படி மாறுது என்பது தான் கதை. 90 களின் இறுதியில் பள்ளியில் படிக்கும் பசங்களின் வாழ்க்கை தான் படம். நம்மளோட பள்ளி பருவ வாழ்க்கைய நாமளே போய் வாழ்ந்துட்டு வந்த உணர்வ தருது…