“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் நடிகர் விஷால் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்திருந்தார் அந்த பேட்டியின் போது துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் நடந்த பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போது, மிஷ்கின் எனக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்
இது குறித்து விஷால் கூறியிருந்ததாவது..
ஜனவரியில் மீண்டும் துப்பறிவாளன் ஷூட்டிங் போகிறோம்.. ஏப்ரலில் படம் வந்து விடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டு விடக் கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும்.
VFF நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வெறும் 10000 ரூபாய் கையில் வைத்து கொண்டுதான் VFF ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வென்ஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி. எனக்கு நடந்த துரோகங்கள் கோப்பைகளில் தான் இந்த நிறுவனமே ஆரம்பித்தேன் இயக்குநர் தவறு செய்யும்போது அதை சரிசெய்ய வேண்டியது என் கடமை. துப்பறிவாளன் 2 வுக்கு அவரை லண்டனுக்கு கூட்டி சென்றிருக்க கூடாது அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம். மிஷ்கின் உடன் கண்டிப்பாக இனிமேல் படம் செய்ய மாட்டேன், அவர் மீதான கோபம் என்னிடம் தீரவில்லை. ஒரு நடிகனாக என்னை கொஞ்சம் வடிவமைத்தவர் என்பது உண்மை, ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவர் எனக்கு செய்தது பச்சை துரோகம். லண்டனில் படக்குழுவுடன் 10 கோடி செலவழித்த பிறகு, ஒரு நாள் நான் இந்த படம் செய்ய முடியாது என மேசேஜ் அனுப்பினார், அப்படியே உடைந்து போய்விட்டேன். அவர் தம்பி படம் முழுக்க வருகிற பாத்திரம் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். துப்பறிவாளன் 2 திரைக்கதையில் 90 சதவீதம் நான் மாற்றியிருக்கிறேன். ஷாலின் ஸ்டைலை நீங்கள் அதில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்