மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

மிஷ்கின் செய்தது பச்சை துரோகம் – விஷால் !

“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் நடிகர் விஷால் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்திருந்தார் அந்த பேட்டியின் போது துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுடன் நடந்த பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போது, மிஷ்கின் எனக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து விஷால் கூறியிருந்ததாவது.. ஜனவரியில் மீண்டும் துப்பறிவாளன் ஷூட்டிங் போகிறோம்.. ஏப்ரலில் படம் வந்து விடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டு விடக் கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும். VFF நிறுவனமே ஒரு…
Read More