சூர்யவன்சி திரை விமர்சனம் !

இயக்கம்ரோஹித் ஷெட்டி

நடிகர்கள்    அக்‌ஷய்குமார், காத்ரீனாஃகைப்

கதை : மும்பையில் 1996 குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மீண்டும்ஒருபெரும்தாக்குதலைதிட்டமிடுகிறார்கள்அதைபோலீஸ்அதிகாரியானசூர்யவன்சிஎப்படிமுறியடிக்கிறார்என்பதுதான்கதை

பாலிவுட்டில் இரண்டு வருடங்களாக தியேட்டருக்கென்றே காத்திருந்த படம். பாலிவுட்திரைக்கொண்டாட்த்தைதிரும்பகொண்டுவரும்எனதிரையுலகினர்பெரிதாகநம்பியபடம்

பாலிவுட்டில் ஹிட்டடித்த சிம்பா, சிங்கம் பாத்திரங்கள் இப்படத்தின் டிரெய்லரில் வர எதிர்பார்ப்பு எகியிருந்தது. ரோகித் ஷெட்டி படங்களில் காமெடி, குத்துப்பாட்டு, பறக்கும் கார்கள், பறந்து பறந்து சண்டை போடும் நாயகர்கள் என ஒரு ஸ்டைல் இருக்கும். இவையனைத்தையும் எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் தரவில்லை.   

1996 குண்டு வெடிப்பில் கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நகர்ந்து நிகழகாலத்தில் சூர்யவன்சி போலீஸ் அதிகாரியின் காதல் கதைக்கு வருகிறது. அவர் ஒரு சண்டையில் மனைவி குழந்தையை பிரிந்து இருக்கிறார் இன்னொரு புறம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். 1996 ல் மறைத்து வைத்திருந்த பல டன் எடை கொண்ட வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிடுகிறார்கள் அதை தனது சக போலீஸ் தோழர்களோடு சூர்யவன்சி முறியடிக்கிறார்.

சூர்யவன்சியாக அக்‌ஷய்குமார் கட் அண்ட் ரைட் போலீஸ் அதிகாரி வேடம், அவர் முகத்தில் காட்டும் தீவிரம் உடலில் இல்லை. அவருக்கு வயதாகிவிட்டது உடலில் தெரிகிறது. ஆனால் அதே உடலுடன் ஹெலிகாப்டரில் தொங்கி கொண்டு போய் தீவிரவாதியை பிடிக்கிறார். காத்ரீனா கைஃப்பு உடன் டூயட் பாடுகிறார். அதிரடி காட்சிகளில் துள்ளலாக சண்டை போடுகிறார் ரசிகர்களுக்கு சரியாக விருந்து வைக்கிறார்.

பேரை மறந்து விட்டு ஒவ்வொரு முறையும் வேறு பெயரில் அழைக்கும்போது தியேட்டர் சிரிப்பில் வெடிக்கிறது.

காத்ரீனா கைஃப்புக்கு பெரிதாக வேலையில்லை அக்சய்யுடன் ஒன்றிரண்டு காட்சிகளில் சண்டை போட்டு ஒதுங்கி கொள்கிறார். இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

கடைசி அரைமணி நேரம் கமர்சியல் ரசிகர்களுக்கு சரியான விருந்து. சிம்பா, சிஙகம், சூர்யவன்சி என மூன்று போலீஸும் ஒன்றாக வரும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. அரைமணி நேரம் நீடிக்கும் சண்டை காட்சி என்றாலும் போரடிக்கவில்லை. ரன்வீர் சிங், அஜய் தேவ்கான் கொஞ்ச காட்சிகள் என்றாலும் கலக்கியிருக்கிறார்கள்.

இனி மைனஸுக்கு வருவோம், இதை மட்டுமே எதிர்பார்த்து செல்லும் ரசிகர்கள் தவிர பெரிதாக வேறு எவரையும் ஈர்க்கவில்லை. இது தான் நடக்குமென்பது காட்சிக்கு காட்சி, முன்பே தெரிந்துவிடுகிறது. திரைக்கதையிலோ,  மேக்கிங்கிலோ எந்த புதுமையும் இல்லை.  அதே அரைத்த மாவு தான். சொல்லப்போனால் படம் ஆரம்பித்து நாம் எதிர்பார்க்கும் ரோகித் ஷெட்டி படமாகவும் இல்லாமல் சீரியஸாகவும் இல்லாமல் ஒரு மாதிரி  இடையில் பயணிக்கிறது.

இசை ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையானதை அபபடியே தந்திருக்கிறது. ஒளிப்பதிவு அபாரமாக இருக்கிறது படத்தை தாங்குவதே ஒளிப்பதிவு எனலாம், இறுதி  ஆக்சன் காட்சிகளெல்லாம் தரமாக படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

சூர்யவன்சி கரம் மசாலா திரைப்படம்.

ரோகித் ஷெட்டி பட ரசிகர்களுக்கு மட்டும்.