கவின், விக்னேஷ் சிவன் உடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ” காத்துவாக்குல ரெண்டு காதல்”. விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமல்லாது, நயன்தாரா உடன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது, விஜய் டிவி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ” லிப்ட்” திரைப்படம் விமர்சகர் இடத்தில் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கவினுடன்- பிகில் திரைப்பட தென்றல் அமிர்தா நடித்திருந்தார்.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில், கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.