ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவுள்ளது. இதன் அறிமுக விழா, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி ஜிஎஸ்டி குறித்து தெளிவான விளக்கம் இல்லாததால் வரும் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் சினிமா தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தெளிவான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சினிமா டிக்கெட் மீதான சேவை வரி குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.