கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது !

'டாடா' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ஸ்டார்'. இப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்க இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 'நித்தம் ஒரு வானம்' படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…
Read More
கவின் மற்றும் யுவன் இணையும் படத்தின் ஸ்டார் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

கவின் மற்றும் யுவன் இணையும் படத்தின் ஸ்டார் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

  'நித்தம் ஒரு வானம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'ஸ்டார்'. பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த…
Read More
கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

  திருச்சியில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒரு பிரபலம்.2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்து வந்தார். அதேபோல் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்தபிறகு காதலை தொடர்வாரா என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்றிருக்கிறார்கள். தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
Read More
மீண்டும் ஒரு புதுமுக இயக்குனருக்கு இசையமைக்கிறார் அனிருத்! பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்

மீண்டும் ஒரு புதுமுக இயக்குனருக்கு இசையமைக்கிறார் அனிருத்! பூஜையோடு படப்பிடிப்பு தொடக்கம்

  ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டாடா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இளம் நாயகன் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த கூட்டணியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான இசையமைப்பாளர் அனிருத்…
Read More
கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் – ப்ரீத்தி (அயோத்தி) இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின். இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் - ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More
கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் – பிப்ரவரி 10 வெளியாகிறது!

கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் – பிப்ரவரி 10 வெளியாகிறது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’,…
Read More
K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள்

K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள்

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க, கவின் - அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில், நடிகர்கள் K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள். Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம்…
Read More
ஊர்குருவியாகும் நடிகர் கவின்!

ஊர்குருவியாகும் நடிகர் கவின்!

  Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக “ஊர்குருவி” படத்தினை உருவாக்கவுள்ளது. சமீபத்திய வெளியீடான “லிப்ட்” படம் மூலம் மிகச்சிறந்த நடிகர் என பாரட்டுக்களை குவித்து, வெற்றி பெற்றிருக்கும், நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி…
Read More
நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்

  கவின், விக்னேஷ் சிவன் உடைய அடுத்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் " காத்துவாக்குல ரெண்டு காதல்". விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமல்லாது, நயன்தாரா உடன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது, விஜய் டிவி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான " லிப்ட்" திரைப்படம் விமர்சகர் இடத்தில் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கவினுடன்- பிகில் திரைப்பட தென்றல் அமிர்தா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். அந்த நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்.…
Read More
லிப்ட் ஒர்க் ஆயிருக்கா- லிப்ட் திரைப்பட விமர்சனம்

லிப்ட் ஒர்க் ஆயிருக்கா- லிப்ட் திரைப்பட விமர்சனம்

லிஃப்ட் விமர்சனம் எழுத்து , இயக்கம் - வினீத் வரபிரசாத் நடிப்பு - கவின், அம்ருதா கதை - ஒரு ஐடி புதிதாக வரும் டீம் லீடர் முதல் நாள் இரவில் லிஃப்டில் தனியாக மாட்டிக்கொள்கிறான். அங்கு பேய் இருப்பது தெரிய வர அதனிடமிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை. மிக மிக எளிமையான கதை, ஒரு ஐடி அலுவலக பில்டிங், நாயகன், நாயகி இதை வைத்து கொண்டு, தமிழ் சினிமா அடித்து துவைத்த பேய்க்கதையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமா பேயே வேண்டாம் என அலறும் அளவு பேய்கதைகளை சொல்லி தீர்த்து விட்டது. ஆனால் அதிலும் ஒரு வித்தியாசத்தை ஹாலிவுட் பாணி கதையாக சொல்லி அசத்தியிருக்கிறார்கள். மொத்த கதையுமே ஒரு ஐடி பில்டிங்கிற்குள் நடக்கிறது அதுவும் நாயகன் நாயகி மட்டும் தான் ஆனால் எந்த இடத்திலும் படம் போர் அடிக்கவில்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தில் அழகாக ஒரு…
Read More