நடிகையாக அறிமுகமாகவிருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகள் !

0
310

தமிழில் பாக்யராஜின் மகள் தொடங்கி ஷங்கரின் மகள் அதிதி வரை பலரும் திரையுலகுக்கு வந்துக்கிட்டிருக்காய்ங்க. அவர்கள் வரிசையில் ராஜீவ்மேனனின் மகள் சரஸ்வதியும் முழு நேர நடிகையாகிறார்.

ராஜீவ்மேனன் கடைசியாக இயக்கிய ’சர்வம் தாள மயம்’ படத்தில் சரஸ்வதி ஒரு பாட்டு சீனில் ஆடியிருந்தார். இப்போ வசந்த் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

வசந்த் ரவி தரமணியில் அறிமுகமானவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த அருண் மாதேஸ்வரன் தான் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது