கோலிவுட்-டில் நோ ஷூட்டிங் & போஸ்ட் புரொடக்‌ஷன்! – ஆனா மல்டிபிள் தியேட்டர்கள் ஓடுது!

திரைத் துறைக்கு க்யூப், யுஎப்ஓ எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டண குறைப்பை வலியுறுத்தி கடந்த 3 வாரங்களாக தயாரிப்பாளர் சங்கம் புதுப்பட வெளியீடுகளை வைத்தது ,இதனால் எப்போதும் களைகட்டும் வெள்ளிக்கிழமை புதுப்பட ரிலீஸ் ஆர்பரிப்புகள் இந்தவாரமும் இல்லை. டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடையேயான பேச்சுவார்த்தை சமரசத்தை எட்டாதததை அடுத்து இந்த வாரம் புதிய படங்களின் ரிலீசுக்கு மட்டுமல்ல, தியேட்டர்கள், ஷூட்டிங்குகள், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்துக்கும் சேர்த்தே ஸ்ட்ரைக் அறிவித்துள்ளன .அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் தவிர்ந்த இடங்களில் எதிர்வரும் 23 ம் தேதி சினிமா தொடர்பிலான அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், இருக்கைகள் குறைக்க அனுமதிக்க வேண்டும், லைசன்சை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை முன்வைத்து இன்றுமுதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.

கோலிவுட்டை ஸ்தம்பிக்க வைத்து தமிழக அரசின் மூலம் பேச்சு வார்த்தை நடத்த சில பல சங்கங்கள் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி விட்டு மேற்கொள்ளும்  இந்த வேலைநிறுத்தத்தில் சென்னை மல்டிபிள் திரையரங்க  உரிமை யாளர்கள் பங்கேற்கவில்லை என சென்னை திரை அரங்க சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது