எவனும் புத்தனில்லை படத்தின் ஹைலைட்ஸ் என்ன தெரியுமோ?

0
312

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எவனும் புத்தனில்லை”. இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்…கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்…மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்..1

.

கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன். அவரிடம் படம் குறித்து கேட்ட போது, “ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதானால் “சைபர் க்ரைம் பற்றிய கதை இது. இன்று ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இருந்தால் உள்ளங்கையில் உலகே வந்துவிடுகிறது. ஆனால், அப்படிப்பட்ட வசதியால் நமக்கு எப்படிப்பட்ட ஆபத்துகள், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கிறது, என்பதை தான் படத்தில் சொல்லியிருக்கிறோம். சாதாரணமாக பெண்கள் சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யும் அவர்களது புகைப்படங்களை, சைபர் குற்றவாளிகள் மாபிங் செய்து அதை ஆபாசமாக சித்தரித்து பணம் சம்பாதிக்கிறார்கள். இதன் மூலம் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். உட்கார்ந்த இடத்திலேயே ஒருவரை தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு இந்த சைபர் குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். இதனை தான் உலகுக்கு சொல்வதோடு, மக்களை எச்சரிக்க செய்வதோடு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலவும் படம் இருக்கும். அதே சமயம், படம் முழுவதும் கமர்ஷியலாக இளைஞர்களுக்கு பிடித்தது போல இருக்கும். நான் கடவுள் ராஜேந்திரன் படத்தில் முக்கியமான வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி என்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

மலைவாழ் மக்களில் ஒருவர் தான் ஹீரோ. அவர் சென்னைக்கு படிப்புக்காக வருகிறார். அப்படி வரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படத்தில் சொல்லியிருக்கிறோம். மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் தான் ஹீரோ என்பதால் அதற்கு ஏற்றவாறு ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். மலைவாழ் மக்கள் போஷனை 6 ஆயிரம் உயரமுள்ள மலை ஒன்றில் படமாக்கி உள்ளோம். வாகனம் செல்லும் வசதி இல்லாத அப்பகுதிக்கு நடந்தே சென்று படமாக்கினோம். பனி அடர்ந்த அந்த மலை மீது படப்பிடிப்பு நடத்த சிரமாக இருந்தாலும், படக்குழுவினர் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தில் அந்தக் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். மொத்தத்தில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.

ஒளிப்பதிவு – ராஜா c.சேகர்

இசை – மரியா மனோகர்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

பாடல்கள் – சினேகன்

வசனம் – S.T.சுரேஷ்குமார்

ஸ்டண்ட் – அன்பு அறிவு, மிராக்கில் மைக்கேல்

நடனம் – அசோக்ராஜா சங்கர்

கலை – A.பழனிவேல்

இணை தயாரிப்பு – கே.டி.எஸ்.பாஸ்கர், K.சுப்ரமணியன் I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்

தயாரிப்பு – வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி