‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

0
404

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்திருந்தார் விஜய். இதற்காக பல இயக்குநர் கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருக தாஸ்.

இதனால், ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிக்க வுள்ளதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார். ஒருவழியாக நீண்ட நாட்களாக நிலவி வந்த ‘தளபதி 65’ இயக்குநர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். அதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியதுள்ளது. அதனை முடித்துக் கொடுத்துவிட்டு, விஜய் நடிக்கும் படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார் நெல்சன்.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கவுள்ளதால், நெல்சனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.