விஜய் பெயரை அரசியலில் பயன்படுத்தகூடாது..!

விஜய் பெயரை அரசியலில் பயன்படுத்தகூடாது..!

  🎬ஆக்டர் விஜய், தனது பெயரை அரசியலில் பயன்படுத்தக்கூடாது என தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடிகர் விஜய் ஒப்புதலின்றி, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும் தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும்…
Read More
‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்திருந்தார் விஜய். இதற்காக பல இயக்குநர் கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருக தாஸ். இதனால், 'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத்…
Read More