“ஒண்டிக்கட்ட” திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது!

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம்   “ ஒண்டிக்கட்ட “ . விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர்    நடிக்கிறார்கள்.         

                                                                     

 எழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.  

சினிமாவின் நிலவி வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இப்போதுதான் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது… இந் நிலை யில் நான்  இசையமைத்து இயக்கி இருக்கும் “ஒண்டிக்கட்ட” திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார் பரணி.

ஒளிப்பதிவு   – ஆலிவர் டெனி / இசை   –  பரணி / பாடல்கள்   –  கபிலன்                                                     

பரணி, தர்மா / எடிட்டிங்  –  விதுஜீவா / நடனம்  –  சிவசங்கர், தினா, ராதிகா                            

ஸ்டன்ட்   –  குபேந்திரன் /  கலை   –  ராம்  /  தயாரிப்பு மேற்பார்வை  – பாண்டியன் தயாரிப்பு  –  மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி