தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ! ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகர்ஜூனா!

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது…இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகர் நாகர்ஜூனா பேசியதாவது , “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

நடிகை ராக்தா பேசியதாவது , ” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. மார்ச் 8 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது”.  என்றார்.

இயக்குநர் அஜய்குமார் பேசியதாவது , ” படத்தின் இயக்குநர் ஒரு புதிய கான்செப்ட்டோடு வந்திருக்கிறார். ஏனெனில், இதில் லவ் ஜானர், ஃபேமிலி ஜானர், க்ரைம்- த்ரில்லர் என எதற்குள்ளும் இதை அடைக்க முடியாத புதிய கான்செப்ட். படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். உங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு சொல்லுங்கள்”. என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசியதாவது, “சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்று கூறினார்.

Related posts:

எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன் ! 'டபுள் டக்கர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு...

March 17, 2024

என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை ! பிரைம் வீடியோவின் “தி வில்லேஜ்” சீரிஸ் டிரெய்லர் வ...

November 18, 2023

தன் கையே தனக்கு உதவி  என்ற மெசேஜூடன் மே4ல் ரிலீஸாகுது ’இருட்டு அறையில் முரட்டு குத்து’

April 28, 2018

இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது 'பரியேறும் பெருமாள்'

April 25, 2023

இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!

June 27, 2024

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி -'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' பட நடிகர் ஹிருது ஹாரூன்!

June 5, 2024