ஆஸ்கார் விருது நிகழ்வு நேரம் மற்றும் பட்டியலில் மாற்றம்!

ஆஸ்கார் விருது நிகழ்வு நேரம்  மற்றும் பட்டியலில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக  மோஷன் பிக்சர்ஸ்  அமைப்பு தெரிவித்துள்ளது.

திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆஸ்கார் விருது பட்டியலிலும், ஆஸ்கார் நிகழ்ச்சியிலும் சிறிதளவு மாற்றம் செய்யப்படவுள்ளதாக The Academy of Motion Picture Arts and Sciences’ board -ன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய மாற்றத்தின்படி பெண்களுக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு முக்கியதுவம் அளிக்கும் என்றும் பிரபல படங்களில் சிறந்த புதிய சாதனைகள் அடையாளப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்கார் தரப்பில், “ஆஸ்கர் விருது வழங்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று நிறைய பேர் கூறியதை நாங்கள் கேட்டோம். அதனை நாங்கள் இப்போது பொருத்திப் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய முறைகள் 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதாவது அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.