ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்தவர்?

சர்வதேச சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்தவர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளி யாகி யுள்ளது.சினிமா ரசிகர்களிடத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ஜேம்ஸ் பாண்ட் 007 ஒரு பிரிட்டீஷ் உளவாளி கதாபாத்திரம். இதில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த இட்ரிஸ் எல்பா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என காலத்திற்கு ஏற்ப பிரபலமாக இருந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

கடந்த 4 ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். இந்நிலையில் 25வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் 2019ல் வெளியாகவுள்ள படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. கறுப்பின நடிகர் இட்ரிஸ் எல்பா முன்னணியில் உள்ள தாக இங்கிலாந்து ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் மற்றும் தோர் ஆகிய படங்களில் இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் தயாரிப்பாளர் பாப்பரா ப்ரோக்கோலியின் “கறுப்பின நடிகர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க இதுவே சரியான நேரம்” என கூறியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.