The Expendables நான்காவது பாகத்தின் திரை விமர்சனம் !!

The Expendables திரை விமர்சனம் !!

புகழ் பெற்ற The Expendables படத்தின் வரிசையில் 4வது பாகம் வந்திருக்கிறது.

David Callaham  உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்கிற ஒரு திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது! Sylvester Stallone பிரதான வேடமேற்று கலக்கியிருந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் பல பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்தனர்.

அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களில்
அவரை தவிர இன்னும் பல ஆக்ஷன் கதாநாயகர்களும் உடன் நடிக்க உலகில் மிகப்பிரபல ஹீரோக்கள் இணையும் படமென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

படத்தில் லாஜிக் இல்லா அதிரடி ஆக்சன் ஸ்டார் ஆக்டர்களின் கேமியோ என ஒரு ஃபார்மேட்டில் ஹிட்டடித்த இந்தப்படத்தில் இது நான்காவது பாகம்
.
2012 –இல் The Expendables 2 (2012) வெளியாகி வெற்றி பெற்றது..
2014- இல் The Expendables 3 வெளி வந்தது.

Suarto Rahmat (Iko Uwais) என்பவன், அணு ஏவுகணைகளை Libiya  வில் ஒரு இரசாயண கூடத்திலிருந்து கடத்தி சென்று அரசியலில் தொடர்புடைய ஒரு பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான் !
இதன் விலைவாக USA மற்றும் Russia ஆகிய இரு பெரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் எழுகிறது!
The Expendables அணியினர் இந்த செயல்பாட்டினை தடுப்பதற்காக தருவிக்கப்படுகிறார்கள்.
முதலில், அவர்களது முயற்சி தோல்வியுற்றாலும் இறுதி வெற்றி யாருக்கு என்பதுதான் மீதிக்கதை .

Expend4bles (2023) - IMDb

இந்த நான்காம் பாகத்தில் முன்னணி ஹீரோக்கள் இல்லை. புதிதாக சில ஹீரோக்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் முந்தின பாகங்களில் இருந்த சர்ப்ரைஸ் எதுவும் இல்லை. கதையும் ஹாலிவுட்டில் 80களில் வழக்கொழிந்து போன அடித்து துவைத்த கதை.
படத்தில் ஆக்சனும் அதிகம் இல்லை ஆரம்பத்தில் ஒரு ஆக்சன் இறுதியில் ஒரு ஆக்சன் காட்சி அவ்வளவு தான்.

ஜான் விக் மாதிரி நிறைய ஆக்சன் படங்கள் வந்து விட்டது இந்த நிலையில் Expendables ரசிகர்களுக்கு இந்தப்படம் ஏமாற்றம் தான்.