நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

0
328

கோலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பாலிவுட் போய் அங்கிருந்து ஹாலிவுட்-டுக்கும் போய் விட்ட  நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ்  ஃபகிர்’ படத்தின் புரொமோஷனுக்கான உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்  பங்கேற்கவுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நாடைபெறும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ட்ரார்டினர்ய் ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரையிடப்படவுள்ளது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் டிராப்டு இன் அன் ஐக் வார்ட்ரோப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷூடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் உலகம் முழுவதும் வரும் மே.30ம் தேதி ‘தி ஃபகிர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அடுத்த போஸ்டர் மே.11ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் தனுஷ் படக்குழுவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கிறார். முதன் முறையாக தமிழ் நடிகரான தனுஷ் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார்.