தல அஜித், தளபதி விஜய் ரசிகர்களை மையமாக வைத்து வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ள ‘விசிறி’ படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதே சமயம் இந்த விசிறி”படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது! மேலும் தலதளபதி ரசிகர்களை ஒன்றிணைக்கும் பாடல் வரிக்காணொளியை சமீபத்தில் “விஜய்சேதுபதி” வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!!
தற்போது படக்குழுவின் புது முயற்சியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் தங்களது புரஃபைல் பிக்சருக்கான “நான் தலவிசிறி” , “நான் தளபதி விசிறி” என்கிற பிரேம் ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளனர்!!!
“நான் தலவிசிறி” – https://www.facebook.com/profilepicframes/?selected_overlay_id=1866424470336922
“நான் தளபதி விசிறி” – https://www.facebook.com/profilepicframes/?selected_overlay_id=2036305043281179
அதைத் தொடர்ந்துதான் விசிறி படம் வரும் பிப்ரவரி 2ல் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது