ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

 

கடந்த வாரம் சென்னை  அலங்காநல்லூரில் பில்லா பாண்டி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அப்படத்தில் பணியாற்றும்  ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் இப்பட தயாரிப்பா ளர்களுக்கும் இடையே டிராவல் பேட்டா தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் செல்ல, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெப்சி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை  ஃஃபெப்சி அமைப்பினர் வைக்க, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது , ‘ஒரு படப்பிடிப்பை நிறுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது.  ஃபெப்சி தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான், பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து  வாழ முடியும். சம்பள விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதன்படி படத்தின் தயாரிப்பாளர், ஃபெப்சி அமைப்பில் இல்லாத யாரை வேண்டுமானாலும் தனது படத்தில் பணிபுரிய வைக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நடந்து, அதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

தயாரிப்பாளருக்கு முழு சுதந்திரம் உண்டு. பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பயணப் படி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாங்கள் தொழிலாளர்கள் வயிற்றி லடிக்க மாட்டோம். தயவு செய்து நீங்களும் (ஃபெப்சி அமைப்பினர்) எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள். இனி எந்த படப்பிடிப்பையும் நிறுத்தாமல், தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனவே தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் நல்ல சம்பளம் கொடுத்து வருகிறார்கள். எனவே, ஃபெப்சியுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பு கிறோம். நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது, அந்தப் படத்தின் தயாரிப்பாளருடைய விருப்பம். அவர்கள் அதிக சம்பளம் கேட்டால், தயாரிப்பாளர்கள் ஏன் கொடுக்கிறீர்கள்? இனி கொடுக்காதீர்கள்’ என்றார்.

இதற்கு பதிலளித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘படத்தின் பட்ஜெட்டில் பெருமளவு சம்பளம் ஹீரோவுக்கு சென்றுவிடுகிறது. அதையெல்லாம் தவிர்த்தாலே இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யலாம். பெப்சி அமைப்பில் இல்லாதவரையும் வேலைக்கு அமர்த்தலாம் என்ற முடிவு கண்டிக்கத்தக்கது’ என்றார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவுக்கு ஃபெப்சி அமைப்பில் உள்ள சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பான பொது விதிமுறைகளை வகுத்து தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 

அது பற்றிய முழு விபரம் இங்கே :

tfpc-productions-wages-guidelines-1

tfpc-productions-wages-guidelines-2

tfpc-productions-wages-guidelines-3

tfpc-productions-wages-guidelines-4

tfpc-productions-wages-guidelines-5

tfpc-productions-wages-guidelines-6

tfpc-productions-wages-guidelines-7

tfpc-productions-wages-guidelines-8

tfpc-productions-wages-guidelines-9

tfpc-productions-wages-guidelines-10

tfpc-productions-wages-guidelines-11

tfpc-productions-wages-guidelines-12

tfpc-productions-wages-guidelines-13

tfpc-productions-wages-guidelines-14