சுருளி ராஜனின் ‘காசி யாத்திரை’ படம் பார்ட் 2 தயார் ஆகிறது..!

முன்னொரு காலத்தில் சென்னையில் 300 மேடைகளில் சுருளிராஜனை கதாநாயகனாக வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.சி.குக காதன் கதை வசனத்தில் நாடகமாக நடத்தப்பட்டது. பின்னர் சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ, வி.கே.ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு.போன்ற அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து வைத்து திரைப்படமாக வெளிவந்து வெற்றிப் படமாக ஓடியதுதான் “காசி யாத்திரை “படம்.

இதனிடையே | கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிப் படத்தை அடுத்து | காசியாத்திரை படத்தை ரீமேக் செய்ய இராமநாராயணன் ஆலோசித்தார். ஆனால் அதற்குள்ளாக அவர் காலமாகிவிட்டதால் அத்திட்டம் அப்போதைக்கு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட முன்னணி நடிகர்கள் படத்தை வெளிநாட்டு உரிமை வாங்கி வினியோகம் செய்து லாபம் ஈட்டிய மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் நிறுவனம் “காசி யாத்திரை – 2 ” படத்தை தயாரிக்க வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் வாங்கி உள்ளது.

இதில் நடிப்பதற்கு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகையரிடம் பேசி வருகின்றது. இராம நாராயணின் பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் பத்து படங்களுக்கு மேல் இயக்கியவருமான புகழ்மணி இப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார். இராம நாராயணனிடம் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதிலும் பணிபுரிய உள்ளார்கள்.

250 படங்களுக்கு கதைகளை பல மொழி படங்களுக்கு வழங்கிய வி.சி.குகநாதன் அவர்களுக்கு இந்த வருடம் திரை உலகிற்கு வந்து 50 வருடமாகிறது. அவரிடம் மேலும் பிரபல முன்னணி பட நிறுவனங்கள் கதைகள் கேட்டுள்ளனர்.

அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ள வி.சி.குகநாதனிடம் இது குறித்து கேட்டபோது, ” தமிழ் திரை உலகில் மீண்டும் கதாசிரிசிர்களின் காலம் துவங்குவது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. என்னைப் போல் திரை உலகில் இன்னும் நிறைய கதாசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் திரை உலகம் பயன் படுத்த வேண்டும். இந்த படம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி படப்பிடிப்பு இடைவிடாமல் வளர்ந்து மே மாதம் “காசியாத்திரை 2 ” திரைக்கு வர உள்ளது” என்றார்