ரியோ நடிப்பில் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் வந்திருக்கும் ரொமான்ஸ் வகைப் படம்.
தமிழில் இப்பொழுது காதல் படங்கள் வருவது குறைந்து விட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ள படம் தான் ஜோ.
ஜோ எனும் இளைஞனின் வாழ்வில் வரும் காதல் தோல்வியும் வெற்றியும் அது அவன் ஏற்படுத்தும் பாதிப்புகளும் தான் கதை. இரு பெண்கள் வாழ்வில் அவன் என்ன செய்கிறான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படம்
கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் ரியோ இதே கல்லூரியில் வந்து சேர்கிறார் கேரளாவை சேர்ந்த நாயகி மாளவிகா இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல் வர முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்..
கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து கேரளாவிற்கு செல்கிறார் நாயகி மாளவிகா ஒரு கட்டத்தில் பெண் கேட்டு செல்கிறார் நாயகன் ரியோ அங்கு ஏற்படும் தகராறில் ரியோவை தவறாக புரிந்தது கொள்ளும் மாளவிகா பிரிந்து விடலாம் என்று கூறுகிறார்.
இதனையடுத்து மாளவிகாவிற்கு திருமண என்று தெரிந்து கொள்ளும் ரியோவின் நண்பர்கள் திருமணத்தை நிறுத்த ரியோவை அழைத்துக் கொண்டு கேரளா செல்கிறார்கள். ஆனால் இடையில் ரியோவிற்கும் வேறொரு பெண்ணுடன் கல்யாணம் நடப்பதை காட்டுகிறார்கள்.
ரியோ காதல் என்ன ஆனது? ‘ஜோ’ படத்தின் கதை.
ரியோவிற்கு நடிகனாக முதல்ப்படம் என சொல்லலாம் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக தன்னை தந்திருக்கிறார். காதல், ரொமான்ஸ் ,செண்டிமெண்ட் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். காதலுக்காக முழுநேர குடிகாரனாக மாறுவதும் அம்மாவுக்காக அதில் இருந்து மீண்டு வருவது என இயல்பாக நடித்திருக்கிறார்.. ரியோ இது போல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் வாழ்த்துக்கள்
நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா அழகாக இருப்பதுடன் அருமையாக நடித்திருக்கிறார். அவரது கண்களே பல கதைகள் பேசுகிறது. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ரியோவின் மனைவியாக நடித்திருக்கும் பவ்யா கோபக்கார பெண்ணாக வருகிறார் .
படத்தில் ரியோ நண்பர்களாக வருபவர்கள் தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். ஒரு கல்லூரி வாழ்வுக்குள் சென்று வந்த உணர்வைத் தருகிறார்கள்.
இசையமைப்பாளர் சித்து குமார், இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது . ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவில் தமிழக மற்றும் கேரளா பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
தமிழில் எப்போதாவது தான் நல்ல காதல் படம் வரும் அப்படி வந்திருக்கும் படம்தான் ஜோ இந்த படத்தை பார்க்கும் பொது சேரனின் ஆட்டோகிராப், பிரேமம், என பல படங்களை ஞாபகபடுத்துகிறது . ஆனாலும் மனதுக்கு இனிமையான நினைவைத் தருகிறது.
இயக்குநர் ஹரிஹரன் ராமின் உழைப்பு படம் முழுதும் தெரிகிறது. கல்லூரி வாழ்வை அத்தனை தெளிவாக தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல ரொமான்ஸ் படம் பார்த்த திருப்தியை தருகிறது ஜோ.