இட்லி பட டீசர் ரிலீஸ்!

அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “. இந்த நகைச்சுவைக் கலந்த “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா ,தேவதர்ஷினி , வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெச்செஜும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது பாட்டிகளுக்கும், கதைகளுக்கும் மரபு வழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் நமக்குக் கிடைத்தன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்களான பாட்டிகளைப் பற்றிய கதைதான் இன்பா டிவிங்கிள் வில்லி என்பதன் சுருக்கமான இட்லி படமாக உருவாகி இருக்கிறது.‘கதம் கதம்’ வெற்றிப் படத்தை தயாரித்த அப்பு மூவிஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது.

கொஞ்சூண்டு டீடெய்லாக சொல்வதென்றால் எப்போதும் பாட்டிகளுக்கு தற்போதைய அசுர வளர்ச்சியான தொழில் நுட்பம் தெரியாதவர்களாகவே இப்பார்கள். அதுவே இந்தப் படத்தில் வரவிருக்கும் நகைச்சுவைக்கு நாற்றங்காலாகியிருக்கிறது.நவீன் தொழில் நுட்பமோ, இன்றைய விஞ்ஞான வளர்ச்சி பற்றியோ தெரியாத 3 பாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களின் பேத்திக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து தங்களது பேத்தியை மீட்க அவர்கள் ஒரு விபரீதமான முடிவையெடுக்கிறார்கள். அதிலும் இந்தக் கால டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாமலேயே அதையே பயன்படுத்தி தங்களது பேத்தியைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். அது எப்படி என்பதுதான் கதை..” என்கிரார் இந்தப் படத்தின் இயக்குநரான வித்யாதரன். இவர் ஏற்கெனவே தமிழில் சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’ மற்றும் கன்னடத்தில் உபேந்திரா நடித்த ‘நியூஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

படத்தில் நடிக்கும் 3 பாட்டிகளில் ‘இன்பா’வாக தேசிய விருது பெற்ற சரண்யாவும், ‘ட்விங்கிளாக’ நகைச்சுவை நாயகி கோவை சரளாவும், ‘வில்லி’யாக காமெடி குயீன் கல்பானாவும் நடிக்கிறார்கள். பேத்தியாக நடிப்பவர் ‘சலீம்’ படத்தில் நடித்த அஸ்கிதா. இவர்களுடன் ‘கத்தி’ அனு கிருஷ்ணா, மனோபாலா, ‘லொள்ளுசபா’ சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, மனோகர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இவ்வளவு சீனிர ஆர்டிஸ்ட்டுகள் இருந்தும் திட்டமிட்டப்படி 29தே நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன். வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. மறுபடியும் சொல்வதற்கு மன்னிக்கவும்.. வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தில் பாடல்கள் , அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது தான் இட்லி படத்தின் ஸ்பெஷல். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும்.

நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது நாங்கள் துப்பாக்கி தூக்கி ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா ?? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?? என்று சந்தேகத்தோடு கேட்டார்… படபிடிப்பில் அந்த காட்சியில் நடிக்கும் போது கூட நடிகைகள் மூவருக்கும் அந்த சந்தேகம் இருந்தது. நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போது அனைவருக்கும் மனநிறைவாக இருக்கிறது” என்று கூறினார் இயக்குநர் வித்யாதரன்.ஆரமபத்தில் சொன்ன அப்பு மூவீஸ் Abbas தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.