லால் சிங் சத்தா எப்படி இருக்கிறது?

லால் சிங் சத்தா

‘Forrest Gump’ என்ற ஆங்கில படத்தின் தழுவல், அந்த அளவு இருக்கிறதா, அமீர்கான்டாம் ஹான்க்ஸ்அளவுக்கு நடித்து இருக்கிறாரா என்பதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவுட்டு, இந்த வாரம் வெளியாகியுள்ளலால்சிங் சத்தாஎன்ற படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இந்த திரைப்படம் ஒரு வாழ்கை பயணம். ஒருவன் வாழ்கையில் வந்து இருந்து தங்கி சென்ற மனிதர்கள் பற்றிஅவன் கூறுவது தான் கதை. லால் என்னும் ஒருவன் ஒரு ரயில் பயணத்தில் தன்னுடன் பயணிக்கும் சகபயணிகளுக்கு தன் வாழ்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறுவது தான் கதை.

முதலில் இந்த படத்தின் சிக்கலை பார்த்துவிடலாம். படத்தில் அமீர்கான் கதாபாத்திரத்தின் நடிப்பு சிலஇடங்களில் ஓவர் டோஸ் ஆன மாதிரி தெரியும், அப்புறம் அந்த பானி பூரி வசனம் இது கொஞ்சம் நெருடல்தான்.

நடிகர்கள் வயதிற்கு அப்பார்பட்டவர்கள் என அமீர்கான் நிரூபித்துள்ளார். இளைஞர், வயது மூத்தவர், நடுவயதுகாரர் என அமீருக்கு பல சவாலான இடங்கள் இருந்தாலும், அதை அசால்டாக ஹேண்டில் செய்கிறார். படத்தை தாங்கி நிற்கிறார் அவர். ஒரு வாழ்கை படத்திற்கு உண்டான லைவ்லி தருணங்கள் படத்தில் நிறையஇருக்கிறது. அதற்கு நடிகர்கள் தான் காரணம் அமீர், கரீனா, சைதன்யா இன்னும் பெயர் தெரியாத பலர்மனதிற்கு இதமான தருணங்களை உருவாக்குகிறார்கள்

படத்தில் பாராட்டிய தீர வேண்டியது நேர்த்தி தான். அதை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தைகூற வேண்டும். படம் எடுப்பது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதில் நேர்த்திதேவை என நினைப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இந்தியாவில் இருக்கும் 110 கோடி பேரை நினைத்துதிரைப்படத்தை உருவாக்கவில்லை, உலகில் உள்ள 700 கோடி பேரை நினைத்து உருவாக்குகின்றனர். அமீர்போன்ற இந்தியா தாண்டிய நடிகர்கள் திரைப்படத்தின் உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்கிறார்கள். இது பார்த்தால் தெரியாது, உங்களுக்கு தெரியாத படி அமைக்கபட்டிருப்பதே அதன் அழகு, சின்ன சீன்களும், ஷாட்களும் நிறைய பொருட்செலவில் எடுக்கபட்டது போல் இருக்கும்.

குறிப்பாக அமீர் பதக்கம் வாங்கும் காட்சி ஏற்கனவே நடந்த ஒரு உண்மை நிகழ்வை வைத்து அதில் அமீர்உருவத்தை அழகா பொருத்தி, பார்ப்பதற்கு உறுத்தாமல் செய்து இருக்கின்றனர். இது ஒரு சாம்பில் தான், இதுபோன்ற பல காட்சிகள் இருக்கின்றனர்.

எல்லோரும் பார்க்கும் வகையில் ஒரு பீல்குட் படமாக தான் இது வந்துள்ளது.