விஷால் சிஸ்டர் ஐஸ்வர்யா-வின் கல்யாணம் ஜோரா முடிஞ்சுது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கையும் ஜி. கிருஷ்ணா ரெட்டி – திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் – ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை சுமார் 1௦.1௦ மணி அளவில் சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.

 

இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கிர்த்திகா உதயநிதி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கௌரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் , பொருளாளர் கார்த்தி – ரஞ்சினி கார்த்தி , தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , கிர்த்திகா உதயநிதி , தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி , தயாரிப்பாளர் சத்ய ஜோதி G.தியாகராஜன் – செல்வி தியாகராஜன் , லட்சுமி புரொடக்ஷன் T. ராமராவ் ,A.L. அழகப்பன் ராக்லைன் வெங்கடேஷ் , ரவி பிரசாத் , சுஹாசினி மணிரத்தினம் , சுந்தர்.C – குஷ்பூ சுந்தர் , ஹான்ஸ் ராஜ் சாக்ஸ்சேனா , சிநேகா பிரிட்டோ ,

நடிகர் பாக்யராஜ் , பூர்ணிமா பாக்யராஜ் , சாந்தனு , அர்ஜுன் மனைவி ஆஷா ராணி அர்ஜுன் , பாண்டிய ராஜன் , ப்ரிதிவி ராஜன் , ஆர்யா ,ஜீவன் , வினய் , குட்டிபத்மினி , ஸ்ரீமன் மற்றும் குடும்பத்தினர் , பசுபதி மற்றும் குடும்பத்தினர் , ரமணா , உதயா , நந்தா ,சிபி ராஜ் , சங்கீதா கிருஷ் , லலிதா குமாரி , விக்ராந்த் – மானசா விக்ராந்த் , நிழல்கள் ரவி , சின்னிஜெயந்த் , ஜெகன் , ப்ளாக் பாண்டி , ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் , ஜே.பி , ஜான் விஜய் , குருஜி , சஞ்சய் பாரதி , ஆதவ் கண்ணதாசன் , சௌந்தர்ராஜ் , அப்சல் , இயக்குநர் P.வாசு , மனோபாலா , மிஷ்கின் குடும்பத்தினர் , விஷ்ணுவர்தன் – அனுவர்தன் , இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி , திரு , நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா , காஸ்டியும் டிசைனர் சத்யா , ஒளிப்பதிவாளர் சங்க துணை தலைவர் ப்ரியன் , கலை இயக்குநர் உமேஷ் மற்றும் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.