உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன் ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.
இதையொட்டி, நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடிகர் பார்த்திபனிடம்,‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்டனர். அதற்கு பார்த்திபன் அவர் பாணியிலேயே “கமல் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அவரிடமே வருகிறீர்களா, இல்லையா எனக் கேட்டு சொல்லிவிடுவேன். ரஜினியை பொறுத்தவரை அவர் ஆண்டவனை கேட்டுத்தான் சொல்வேன் என்பார். எனக்கு ஆண்டவன் பாஷை தெரியாது. அதனால் ஆண்டவரிடம் பேச முடியாது. இதனால் என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியவில்லை” என்று கூறியது சலசலப்பை கிளப்பி விட்டதாம்.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள பார்த்திபம்,“கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜனி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கரை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ” பார்த்திபனை hero வா போட்டு படம் எடுங்கள்” எனத்தூண்டியவர். Ktvi பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர்.உதாரணத்திற்கு “எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்” என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார். நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).
இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன் சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன். இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம்,அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை.பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜனி சாரின் கண்ணியத்துடனும் மரியாதை யுடனும்”நீங்களுமா?” என அதிர்ந்திருக்கிறார்கள் அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்!” என்று தெரிவித்தார்
Related posts:
சர்வர் சுந்தரம் படத்தின் சென்சார் க்ளியர் - ரிலீஸ் எப்போ?July 29, 2017
கார்த்தி நடித்த ‘தேவ்’ டீம் அறிவித்துள்ள BMW சூப்பர் பைக் போட்டி!February 18, 2019
ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?October 15, 2020
ஓட்டுக்காக பணம் தரும் பாணியை மையமாக வைத்து பின்னப்பட்ட ‘தப்பு தண்டா’September 6, 2017
தன் மகனுக்கு ஜோடி தேடும் விக்ரம்!November 12, 2017