நாளைய இளம் வாக்காளர்களே, நீங்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தான் இருக்கிறது! நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு!

நாளைய இளம் வாக்காளர்களே, நீங்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தான் இருக்கிறது! நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சு!

நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வு நீலாங்கரையில் இன்று நடைபெற்றது, இந்த நிகழ்வில் நடிகர் விஜய் பேசுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே, தற்போது பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன். இங்கு இருக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை பார்க்கும் போது எனது பள்ளி நினைவுகள் நினைவுக்கு வருகிறது. நான் படிக்கும்போது ரொம்ப சுமார்தான். நான் ஒரு திரைப்படத்தில் பார்த்தேன், அந்த வசனம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது. நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் அவர்களால் எடுக்க முடியாது. அடுத்ததாக நீங்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்த உங்களது ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நண்பர்களுக்கும், அதன் தலைவர் ஆனந்த் அண்ணனுக்கும்…
Read More
விஜய் பெயரை அரசியலில் பயன்படுத்தகூடாது..!

விஜய் பெயரை அரசியலில் பயன்படுத்தகூடாது..!

  🎬ஆக்டர் விஜய், தனது பெயரை அரசியலில் பயன்படுத்தக்கூடாது என தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடிகர் விஜய் ஒப்புதலின்றி, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும் தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும்…
Read More
நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த பொன்வண்ணன், தன்னுடைய பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ‘நடிகர் சங்கத்தில் பதவி ஏற்கும்போது, பல கட்சியைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காததால் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால், அதற்குப் பதில் அளிக்க விரும்பாமலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில், பொன்வண்ணனின் கருத்துக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தன்னுடைய நிலைப்பாடு பற்றி விளக்கினார் விஷால். மேலும்,…
Read More
நிஜ அண்ணன், தம்பி கதையிலும் பிரதர்ஸூகளாக நடிக்கும்  “ திருப்பதிசாமி குடும்பம் “

நிஜ அண்ணன், தம்பி கதையிலும் பிரதர்ஸூகளாக நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “. இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறிய போது, “சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலியில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்த நான் முதன் முதலாக எனது மகன்களை கதாநாயகர்களாக வைத்து முடித்து U சர்டிபிகேட் வாங்கி சென்சார் குழுவினரால் பாராட்டையும் வாங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே அரசு, சத்ரபதி என்று இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன். இந்த படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும்…
Read More
கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன்  ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.  இதையொட்டி, நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடிகர் பார்த்திபனிடம்,‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று  கேட்டனர். அதற்கு பார்த்திபன் அவர் பாணியிலேயே “கமல் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அவரிடமே வருகிறீர்களா, இல்லையா எனக் கேட்டு சொல்லிவிடுவேன். ரஜினியை பொறுத்தவரை அவர் ஆண்டவனை கேட்டுத்தான் சொல்வேன் என்பார். எனக்கு…
Read More