வரும் 26ம் தேதி எல்லா ஷூட்டிங்களும் ரத்து!

தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா வருகிற 26-ஆம் தேதி  (சனிக்கிழமை) பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சினிமாவை சேர்ந்த அனைவரும் விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்யுமாறு சண்டை இயக்குனர்கள் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஒருநாள் மட்டும் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.