தமிழ் புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷனில் இப்படியும் ஓர் அணி!

தமிழ் புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷனில் இப்படியும் ஓர் அணி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிறு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே மூன்று அணிகள் போட்டியிடும் நிலை யில், நான்காவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் போட்டியிரும் இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள். 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் ’முன்னேற்ற அணி’ யின் வேட்பாளர்கள் அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், 21 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு: 1. எஸ்.ரங்கா (எ) ரங்கா ரெட்டி 2. எஸ்.வி.தங்கராஜ் - சுந்தரா டிராவல்ஸ் 3. ஏ.ஏழுமலை 4. எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார் 5. பி.ஜி.பாலாஜி 6. கே.சுரேஷ் கண்ணன் 7. பி.ராஜேந்திரன் (எ) கெட்டப் ராஜேந்திரன் 8. எஸ்.ஜோதி…
Read More
வரும் 26ம் தேதி எல்லா ஷூட்டிங்களும் ரத்து!

வரும் 26ம் தேதி எல்லா ஷூட்டிங்களும் ரத்து!

தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா வருகிற 26-ஆம் தேதி  (சனிக்கிழமை) பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சினிமாவை சேர்ந்த அனைவரும் விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்யுமாறு சண்டை இயக்குனர்கள் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஒருநாள் மட்டும் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Read More