நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

0
355

விமலின் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’,  இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’,  ‘தர்ம பிரபு’  இயக்குநர் முத்துகுமாரின் இயக்கத்தில் ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் விமலின் நடிப்பில் உருவாகி அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் விமல் நடித்த சில படங்கள் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இன்னமும் பெயரிடப்படாத படம்… ஆகிய இந்த நின்றிருக்கும் படங்களை விரைவாக முடித்து கொடுக்கவிருக்கிறார் நடிகர் விமல்.

இதையடுத்து இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குல சாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குநர் சுராஜின் உதவியாளர் ராஜதுரையின் இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.

இதில் இந்த ‘குல சாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குல சாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது