அருண் விஜய் நடித்து வந்த #AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அருண் விஜய் நடித்து வந்த #AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கொரோனாவுக்கு பிந்தைய தமிழ்சினிமா வெகுவாக சகஜ நிலைக்கு திரும்ப முயன்று வருகிறது. படப்பிடிப்புகள் அரசு கூறிய முறைப்படி பாதுகாப்பாக நடந்து வருகிறது. வெளிப்புற படப்பிடிப்புகளும் முழுவீச்சில் துவங்கியுள்ளது. ' குற்றம் 23' படத்திற்கு பிறகு அருண் விஜய் - அறிவழகன் இணைந்திருக்கும் #AV31. அதிக பொருட்செலவில் தயாராகும் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் அருண்விஜய்யுடன் ரெஜினா, புதுமுகம் ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் பகவதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் பிரமாண்டமாக நடந்துள்ளது சுமார் 3000த்துக்கும் மேலான துணை நடிகர்கள் கொண்டு ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. நாயகன் நாயகி உட்பட அனைவருக்குமே 3000 பேருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படத்தில் தயாரிப்பாளருக்காக கொரோனாவை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்து தந்துள்ள அருண் விஜய் கூறுகையில்," எப்போதுமே சினிமா ஒரு கூட்டு…
Read More
தனுஷ் நடிக்கும் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டது!

தனுஷ் நடிக்கும் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டது!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. டி43 என்றழைக்கப்படும் படம். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம் என்பதால் டி43 என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படம் த்ரில்லர் படமாக அமையலாம்.. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொருவராக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளார் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இதையடுத்து இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி இந்த படத்தில் இணைய உள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று…
Read More
பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

மலையாளத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருபவர் பிரித்விராஜ். இவருடைய தயாரிப்பில் '9' மற்றும் 'டிரைவிங் லைசன்ஸ்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. தற்போது தனது மூன்றாவது தயாரிப்பான ’குருதி’ ஷூட் நாளை தொடங்குமென அறிவிச்சிருக்கார். இப்படத்தை மனு வாரியர் டைரக்ட் செய்யப் போறார். ஹிந்தியில் 'காஃபி ப்ளூம்' என்ற படத்தை இயக்கியவர், 'குருதி' படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் பிரித்விராஜுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்காங்க. அனுஷ் பல்யால் எழுதியுள்ள இக்கதைக்கு அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். நாளை -டிசம்பர் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஜனவரி 2-ம் வாரத்துக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருக்காய்ங்க
Read More
‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு  46 நாட்களில் முடிவடைந்தது!

‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு 46 நாட்களில் முடிவடைந்தது!

ஒரு படத்தின் ஷூட்டிங் என்றால் மினிமம் 90 நாள் என்று சொல்லி வந்த சூழலில் 46 நாட்களில் ஒட்டுமொத்த 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. கொரோனா ஊரடங்கில் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. ஆகையால், மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'த்ரிஷ்யம் 2' படத்தின் பணிகளைக் கேரளாவில் தொடங்கினார்கள். செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம்…
Read More
ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

  கடந்த வாரம் சென்னை  அலங்காநல்லூரில் பில்லா பாண்டி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அப்படத்தில் பணியாற்றும்  ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் இப்பட தயாரிப்பா ளர்களுக்கும் இடையே டிராவல் பேட்டா தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் செல்ல, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெப்சி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை  ஃஃபெப்சி அமைப்பினர் வைக்க, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது , ‘ஒரு படப்பிடிப்பை நிறுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது.  ஃபெப்சி தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான், பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து  வாழ முடியும். சம்பள விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் ஒரு…
Read More