ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதி வாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை யில் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடர்ந்த காடுகளுக்கு முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.
காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுகள் வாழ்வ்து போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்.
சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் விஜய் சேதுபதியின் ஒரேயொரு கெட்டப் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதில் 20 வயது இளைஞராக தாடி – மீசை இல்லாமல் நடிக்கவுள்ளதால், தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தாடி – மீசையை எடுக்க திட்டமிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
இவரது நடிப்பு திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தில் இயக்குனர் ஆறுமுக குமார் . ” 8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன் . இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக மிக சுவாரசியமானது மட்டுமின்றி மிகவும் சவாலானது கூட. இச்சவாலை அவர் மிக சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதை கண்டு ஆச்சிரியப்பட்டு வியந்தேன் .