சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.
இதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related posts:
இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் அறிமுகமாகும் புதிய படம்!February 14, 2022
எதிர்வினையாற்று இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!November 24, 2019
எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’June 12, 2019
தயாரிப்பாளர் சங்க விவகாரம் : ஐகோர்ட் உத்தரவையடுத்து பூட்டு அகற்றம்!December 22, 2018
கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம் -'வஞ்சகர் உலகம்'January 8, 2018