‘ தீரன் அதிகாரம் ஒன்று’ விஷுவல் ட்ரீட் – சொல்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் !!!

0
758

நேற்று வெளியான காற்றுவெளியிடை திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று சாதனைகளை ஒரு பக்கம் படைத்து வரும் வேளையில், கார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படபிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படபிடிப்பு “ ஜெய்சல்மர் “ பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். யதார்த்தமான லோக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார்.

எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ஆக்சன் காட்சி ஒன்றும் “பூஜ்” பகுதியில் நடைபெறவுள்ள படபிடிப்பில் படமாக்கப்படவுள்ளது. மொத்தம். இங்கே 40 நாட்கள் படபிடிப்பாகும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

கார்த்தி , ரகுல் ப்ரீத் சிங் , அபிமன்யு சிங் , போஸ் வெங்கட் நடிக்கும் “ தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை தமிழில் பல தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் “ ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் “ சார்பாக எஸ் .ஆர். பிரகாஷ் பாபு ,எஸ். ஆர் . பிரபு , ஆகியோர் தயாரிக்க “ சதுரங்க வேட்டை “ வினோத் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு சத்யன் சூரியன் , படத்தொகுப்பு டி.சிவநந்தீஸ்வரன் , கலை கே. கதிர் , சண்டை பயிற்சி திலீப் சுப்புராயன்.