விஷ்ணு விஷால் நடித்த ‘ இன்று நேற்று நாளை’ பட இரண்டாம் பாகம் பூஜை1

விஷ்ணு விஷால் நடிப்பில் 2015 ஆண்டு வெளிவந்த திரைப்படம் இன்று நேற்று நாளை.இந்த படத்தில் விஷ்ணு விஷாலிற்கு ஜோடியாக மியா நடித்திருந்தார்.டைம் டிராவலை மையமாக வைத்து தமிழில் உருவாகிய முதல் படம் இதுதான்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.நல்ல வசூலும் கிடைத்தது.

எதிர்காலத்தில் கண்டுபிடித்த டைம் டிராவல் மெஷின் நிகழ் காலத்தில் வாழ்பவர்கள் கையில் கிடைத்ததால் ஏற்படும் சிக்கல்கள், அதை எப்படி கதாநாயகன் சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் முதல் பாகத்தின் கதை. இந் நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் கதாநாயகி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் கார்த்திக் பொன்ராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் ஜகஜாலா கில்லாடி, FIR,மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.