விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

சினிமா ஒரு கருணையற்ற போர்க்களம். இங்கே எந்தவித சலுகையையும் எதிர்பார்க்க கூடாது. படைப்பின் இறுதி வடிவம் பார்வையாளரை திருப்திபடுத்தியதா இல்லையா என்பது மட்டும்தான் கவனிக்கப்படும். அதன் பின்னால் இருந்த உழைப்பும் சிரமங்களும் அதன் பின்னர் தான் அங்கீகரிக்கப்படும். இதோ நாளை ரிலீஸாகப் போகும் துப்பறிவாளன் தொடங்கிய பின்னர் தான் விஷாலுக்கு நிறைய பொறுப்புகள் வந்தன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவராகவும் ஆனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகி ரஜினி கால்ஷீட், விஜய் கால்ஷீட் வாங்கி கல்லா நிரப்பியவர்கள் மத்தியில் சொந்தப்படத்திற்கு நேரம் கொடுக்க முடியாத அளவுக்கு பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். இன்னும் சில மணி நேரங்களில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்ற சூழலில் அன்று காலை தான் ஏதாவது முக்கிய பிரச்னைக்கு பேச அழைப்பார்கள். ‘ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுங்க...’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. சுமார் 20 நாட்கள் நடந்தன.…
Read More
விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”!

விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”!

விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது. “நேசம் கொண்ட தலைவன் வந்தான், நெஞ்சே நிமிர்ந்து நில்லு, நெருப்பைப் போல தீமை எரிக்கும் நேர்மை இவன்தான் சொல்லு வீரம் பாதி ஈரம் பாதி வெல்லும் எங்கள் விஷால் நீதி…” என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஒளிப்பதிவு…
Read More
தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. இது குறித்து விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான்…
Read More
விஷால் சிஸ்டர் ஐஸ்வர்யா-வின் கல்யாணம் ஜோரா முடிஞ்சுது!

விஷால் சிஸ்டர் ஐஸ்வர்யா-வின் கல்யாணம் ஜோரா முடிஞ்சுது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கையும் ஜி. கிருஷ்ணா ரெட்டி - திருமதி ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் - ன் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகனும் , மணமகளும் தங்க நிறத்தில் உடையணிந்து இருந்தனர். காலை சுமார் 1௦.1௦ மணி அளவில் சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.   இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கிர்த்திகா உதயநிதி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கௌரவ செயலாளர்கள் கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா , நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் – சரண்யா…
Read More
7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதற்காக இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் "நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பணிகளால் சரியாக படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரியில் ஒரு படம், ஏப்ரலில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருந்தீர்கள். அதுவும் முடியாமல் போய்விட்டது. இதனால் நீங்கள் வாங்கி கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியதிருக்குமே. இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு தானே" என்ற கேள்வியை விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இந்த இழப்பை எல்லாம் 'சண்டக்கோழி 2' படத்தின் மூலம் மொத்தமாக கூட சரி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு…
Read More
விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

நடிகர் சங்க செயலாளரு, தயாரிப்பளர் சங்கத் தலைவருமான விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடே ஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது. .இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ரா மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்…
Read More
விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. காரணம், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார். மிக முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றவுள்ளாராம். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. இந்த…
Read More
மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரை உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால் விஷா லின் இந்த முடிவுக்கு பல திரையங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இம்முடிவுக்கு குறித்து ஆலோசிப்பதற்காக விரைவில் சங்கக் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்து கோயம்புத்தூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசிய போது, "தமிழக அரசை விஷால் முறைப்படி அணுகி கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்காமல் வேலைநிறுத்தம் என்பது எந்த விதத்தில் நியாயம். விஷால் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில்…
Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த…
Read More